Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > தனக்குத் தானே வாதாடவுள்ள நியூசிலாந்து துப்பாக்கிதாரி

தனக்குத் தானே வாதாடவுள்ள நியூசிலாந்து துப்பாக்கிதாரி

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரண்டு மசூதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தனக்கு தானே வாதாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை (15) அவுஸ்திரேலிய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதோடு 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நியூசிலாந்து எப்போதும் சந்தித்திராத கொடுமையான பயங்கரவாதத் தாக்குதல் இதுவென அந்நாட்டு பிரதமர் ஜசிந்தாவினால் விழிக்கப்பட்ட இச்சம்பவம் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் மற்றுமன்றி உலகளாவிய ரீதியில் மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்றத்தில் தனக்கு தானே வாதாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி பிரெண்டன் டாரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கூறும்போது, டாரண்ட் மனதளவில் தடுமாறி இருக்கிறார்.

அவர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தானே வாதாட டாரண்ட் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நேர்ந்தால் அவர் தீவிரவாதக் கருத்துகளை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply