Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > தேர்தல்களுக்கு ஏற்ப எமது நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும் – சி.வி

தேர்தல்களுக்கு ஏற்ப எமது நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும் – சி.வி

எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாகாண சபை இருந்தவரையில் தமக்கொரு அடையாளம் இருந்ததென்றும் மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் எந்தெந்த தேர்தல் வருகின்றதோ அதற்கு ஏற்றாற்போல தமது நடவடிக்கைகளை மாற்றியமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply