Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > பபி கைது செய்யப்பட்டுள்ளார்

பபி கைது செய்யப்பட்டுள்ளார்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கடுவளை பபி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிபடையினர் இன்று நடாத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர், டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக கோஷ்டித் தலைவரான அங்கொட லோக்காவின் நெருங்கிய சகா என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர் கைது செய்யப்படும் தருணத்தில் அவர் வசமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் கஞ்ஜா மற்றும் 600 கிராம் ஹெரோயின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply