Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசேட சட்ட ஆலோசகரின் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

2016 தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசேட சட்ட ஆலோசகர் ரொபர்ட் முல்லர் தயாரித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கையளிக்கப்பட்டுள்ளதுடன், அது மேலதிக குற்றச்சாட்டு எதனையும் முன்வைக்கவில்லையென அமெரிக்க நீதித் திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையினை அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் (William Barr) ஒழுங்கமைப்பதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த விடயத்தை காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பில் அவர் தீர்மானங்களை மேற்கொள்வாரென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ரஷ்ய தலையீடு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நெருக்கமான 6 பேர் மற்றும் ரஷ்யர்கள் பலர் மீது விசேட சட்ட ஆலோசகர் ரொபர்ட் முல்லர் முன்னரே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கையின் முக்கிய அவதானிப்புகளை, காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வார இறுதியில் தெரிவிப்பதற்கான எதிர்பார்ப்பில் தாம் இருப்பதாக அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் கடிதம் மூலம் காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply