Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு தமது நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தைக் காப்பாற்றி அமைதியை நிலைநாட்டவும் வளர்ச்சியை முன்னெடுக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ள செய்தியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்குமிடையிலான அனைத்துப் பிரச்சினைகளும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply