Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > நுவரெலியா விபத்தில் 50 பேர் காயம்

நுவரெலியா விபத்தில் 50 பேர் காயம்

நுவரெலியா – வலபனை பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறையிலிருந்து சுற்றுலாவிற்காக பயணித்த பஸ் ஒன்றே, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்;.

வலபனை – மஹவங்குவ பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வலபனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வலபனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply