Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > வத்தளை தீயை கட்டுப்படுத்த பாரிய பிரயத்தனம் (VIDEO)

வத்தளை தீயை கட்டுப்படுத்த பாரிய பிரயத்தனம் (VIDEO)

வத்தளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் வத்தளை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply