Web Analytics Made Easy -
StatCounter
Home > விளையாட்டு > தடைகளை தாண்டி ஐ.பி.எல் களத்தில் லசித் மாலிங்க

தடைகளை தாண்டி ஐ.பி.எல் களத்தில் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளின் அணித் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்கவிற்கு, ஐ.பி.எல் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குப்பற்ற வேண்டுமாயின், மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குப்பற்றி, திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இந்த அறிவிப்பை அடுத்;து, ஐ.பி.எல் போட்டிகளில் பங்குப்பற்றுவதனை தவிர்ப்பதற்கு லசித் மாலிங்க இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.

எனினும், ஐ.பி.எல் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பங்குப்பற்றுகின்றமையினால், அவர்களின் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்காக லசித் மாலிங்கவிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, எதிர்வரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply