Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > இந்தியாவினால், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அபாய நிலைமை – நாசா

இந்தியாவினால், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அபாய நிலைமை – நாசா

இந்தியாவின் விண்வெளி செயற்பாட்டினால், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவினால் விண்வெளியிலுள்ள செயற்கைகோளொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையிலேயே, நாசா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் செயற்கை கோளை மிஷன் சக்தி திட்டத்தின் ஊடாக இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இந்த நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட செயற்கை கோளின் துகில்கள் விண்வெளியில் காணப்படுகின்றமையினால், அவை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவினால் சுட்டு வீழ்த்தப்பட்ட செயற்கை கோள், 400 துண்டுகளாக சிதைவடைந்து, விண்வெளியில் காணப்படுவதாக நாசா விஞ்ஞானியான ஜிம் பிரிடென்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணப்படுகின்ற துண்டுகளில் 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த துண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ அளவை கொண்டமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட துண்டுகளில் 24 துண்டுகள், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பயணிக்கும் பாதையில் மிதப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நாசா விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply