Web Analytics Made Easy -
StatCounter
Home > சினிமா > தளபதி 63 படப்பிடிப்புக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை?

தளபதி 63 படப்பிடிப்புக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை?

ரசிகர்களின் தொல்லை அதிகரித்து வருவதனால், எதிர்வரும் காலங்களில் உள்ளக அரங்குகளில் மாத்திரம் படப்பிடிப்புக்களை நடாத்த ‘தளபதி 63″ குழுத் திட்டமிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படப்பிடிப்புக்கள் சென்னையில் மிக வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹைத்ராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்புக்களை நடாத்த படக்குழு தீர்மானித்திருந்தது.

எனினும், இந்த திரைப்படத்தை சென்னையில் படமாக்கினால், தமிழகத்திலுள்ள கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என விஜய் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் முழுமையான படப்பிடிப்புக்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களின் தொல்லை அதிகரித்துள்ளமையினால், படப்பிடிப்புக்களை மேற்கொள்வதில் படக்குழுவினர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விடயங்களை கருத்;தில் கொண்டே, படப்பிடிப்புக்களை உள்ளக அரங்குகளில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளைய தளபதி விஜய், வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விரைவில் நாடு திரும்பியவுடன், படப்பிடிப்புக்கள் துரித கதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply