Web Analytics Made Easy -
StatCounter
Home > விளையாட்டு > திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர் அபராதம்

திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்தி, விளையாட்டு நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பொரள்ளை – கிங்சி – ஹோர்டன் பகுதியில் திமுத் கருணாரத்ன செலுத்திய ஜுப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து, திமுத் கருணாரத்ன பொரள்ளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, திமுத் கருணாரத்னவின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்துடன், திமுத் கருணாரத்னவை, நுகேகொடையிலுள்ள தேசிய போக்குவரத்து பிரதம வைத்திய நிறுவனத்தில் முன்னிலைப்படுத்தி, அறிக்கையொன்றையும் பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், பாதிக்கப்பட்ட நபருக்கு புதிய முச்சக்கரவண்டியொன்றை கொள்வனவு செய்து, தான் கையளிக்கவுள்ளதாக திமுத் கருணாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியிருந்தார்;.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பு, வழக்கை மீளப்; பெற்;றுக் கொண்டு, சமாதானமாக செல்ல விருப்பம் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வழக்கு மீதான விசாரணைகளை மே மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply