Web Analytics Made Easy -
StatCounter
Home > சினிமா > மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரஜினி (PHOTOS)

மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரஜினி (PHOTOS)

தமிழ் திரையுலகத்தின் சிரேஸ்ட இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று இறையடி எய்தினார்.

சென்னையில் கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த மகேந்திரன், இன்று காலை இறையடி எய்தியதாக அவரது மகன் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரது பூதவுடல். அன்னாரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடலுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் பலர் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பேட்ட’ திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

Leave a Reply