Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > இலங்கை கிரிக்கெட் ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புடைய பெண் யார்? விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புடைய பெண் யார்? விசாரணைகள் ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டின் பின்னணியில் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புடையவர்களுக்கும், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையில் இடைதரகராக இந்த பெண் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்ணொருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் விளையாட்டு வீரர் ஒருவரினால் இந்த பெண் ஏனைய வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணுடன் சில கிரிக்கெட் வீரர்கள் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் விசாரணைகளில் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply