Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் இணைந்து இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஐந்து வருடங்களில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 50 முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பங்களிலிலும் கழிப்பிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

வர்த்தகம் செய்ய ஏதுவான நாடாக இருக்கும் பட்டியலில் இந்தியாவை மேலும் முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் ஸ்மார்ட் ரயில்வே நிலையங்கள் உருவாக்கப்படும்.

ஒவ்வொரு தனி நபருக்கும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கி சேவைகளை அணுகும் வசதி செய்து தரப்படும்.

நீதிமன்றங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் நீதிமன்றங்கள் நவீனமயமாக்கப்படும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்படும்.

புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும்.

காற்று மாசை குறைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும்.

கிராமப்புறங்களில் ஏழ்மையான வீடுகளுக்கும் எல்பிஜி தொடர்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

வரி விகிதங்கள் குறைக்கப்படும் மற்றும் அதிகப்படியான வரி வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

Leave a Reply