Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > மலையக தொழிலாளர்கள் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

மலையக தொழிலாளர்கள் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

ஹட்டன் – கொட்டகலை – டிரேட்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 35 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தருணத்தில், தேயிலை செடியிலிருந்த குளவி கூடொன்று கலைந்துள்ளமை ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply