Web Analytics Made Easy -
StatCounter
Home > விளையாட்டு > ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை பெண்ணுக்கு சந்தர்ப்பம்

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை பெண்ணுக்கு சந்தர்ப்பம்

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுடன் இணைந்ததாக நடைபெறும் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிக்கான சந்தர்ப்பம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி ஷாமரி அதப்பத்துவிற்கு கிடைத்துள்ளது.

மூன்று அணிகள் பங்குப்பற்றும் இந்த போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் தருணத்தில், இந்த மகளிருக்கான போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 2ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply