Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் கையளிக்கப்படவில்லை

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் கையளிக்கப்படவில்லை

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் எந்தவித ஆவணங்களும் இதுவரை தமக்கு கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் கனேடிய தமிழ் பிரஜை ஒருவரும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளும் இந்த இரண்டு வழக்குகளை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் வைத்து, பாதுகாப்பு முன்னாள் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறான எந்தவித ஆவணங்களும் பாதுகாப்பு முன்னாள் செயலாளரிடம் கையளிக்கப்படவில்லை என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்;ஸ, அமெரிக்காவின் நேவாடா மாநிலத்திலேயே தற்போது தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாதுகாப்பு முன்னாள் செயலாளர், அங்குள்ள இலங்கையர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றார்.

இந்த நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply