Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > திட்டமிட்ட வகையில் பணிப் பகிஷ்கரிப்பு – தயார் நிலையில் இ.போ.ச

திட்டமிட்ட வகையில் பணிப் பகிஷ்கரிப்பு – தயார் நிலையில் இ.போ.ச

திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் ஆகியன தெரிவிக்கின்றன.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவிக்கின்றார்.

இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள பணிப் பகிஷ்கரிப்பிற்கு ரயில் சாரதிகள், உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனைத்து இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய அபராத நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ள பணிப் பகிஷ்கரிப்பை எதிர்நோக்கும் வகையில் தாம் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply