Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > சஹரானின் செயற்பாடு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் – ரணில் எச்சரிக்கை

சஹரானின் செயற்பாடு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் – ரணில் எச்சரிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் போதனைகளை சஹரான் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளமையினால், தொடர்ந்தும் அச்சுறுத்தலான நிலைமை காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசிம், தனது போதனைகளை தமிழ் மொழியிலேயே வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்த போதனைகளை கேட்ட பலர் அவரின் கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக மொஹமட் சஹரான் ஹசிமின் இந்த செயற்பாடானது, இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சஹரானின் அனைத்து போதனைகளும் தமிழ் மொழியில் உள்ளமையினால், தமிழ் நாட்டிற்கு அது அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயற்பாடுகள் புற்றுநோயை போன்று, தொடரும் அபாயம் காணப்படுகின்றமையினால், அதனை முழுமையாக இல்லாதொழிக்க நாட்டின் சட்டங்களில் தொடர்ச்சியாக மாற்றங்களைகொண்டு வர வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாட்டில் தற்போதுள்ள சட்டம் போதுமானதாக கிடையாது எனவும், பயங்கரவாத சட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் புதிய யுகமொன்றை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டம் குறித்து ஆராய்ந்து, அவ்வாறான சட்டமொன்றை இலங்கையிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

You may also like
புகையிலை கம்பனியின் உதவியுடன் ஜனாதிபதி நிர்மாணித்த ஓய்வு மண்டபம் – வெளியான சர்ச்சை
சர்வதேசத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதே சவால் – ரணில் கருத்து
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வேன் – ஷவேந்திர சில்வா
இலங்கை சிறுபான்மை உரிமை தொடர்பில் இந்தியாவில் ஹக்கீம் கருத்து

Leave a Reply