Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > சுஷ்மா சுவராஜ் காலமானார்

சுஷ்மா சுவராஜ் காலமானார்

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சுஷ்மா சுவராஜ் தனது 67 வயதில் காலமானார்.

சுஷ்மா சுவராஜ் இன்றிரவு காலமானதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சுகயீனமுற்றிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுஷ்மா சுவராஜின் கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலையில் இருப்பதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வெளிவிவகார முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் உயிரிழப்பிற்கு, பாரதீய ஜனதா கட்சி அனுதாபத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த சில காலமாக சுகயீனமுற்றிருந்த சுஷ்மா சுவராஜ், கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply