Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > தமிழ் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

தமிழ் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர் பிரசன்னாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் இன்று விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் மற்றும் அதன் குறைப்பாடுகள் தொடர்பில் தினக்குரல் வார வெளியிட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரமே இந்த கட்டுரையை ஊடகவியலாளர் பிரசன்னா வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த ஊடகவியலாளரை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் வெவ்வேறாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தொலைபேசியூடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்ய ஊடகவியலாளர் பிரசன்னா நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply